தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் 'வாட்' வரி வசூல் சரிந்தது!
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் வாட் வரி வசூல் சரிந்தது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாநிலங்களின் மதிப்பு கூட்டு வரி வசூல் குறித்து, PRS என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது. அந்த ஆராய்வில் பிற மாநிலங்களை விட, தமிழகத்தில் 61% வரிவசூல் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. பெட்ரோல், டீசல் விற்பனை குறைந்துள்ளதாலும், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதாலும் தமிழகத்தில் வரிவசூல் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விற்பனை மற்றும் மதுபான விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய வரி வசூல், மற்றும் வாட் வரி ரூ.3,736 கோடி குறைந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக, மகாராஷ்ட்ராவில், 2667 கோடி ரூபாயும், உத்திரபிரதேசத்தில் 1886 கோடி ரூபாயும், தெலுங்கானாவில் 1760 கோடி ரூபாயும், கேரளாவில் 1551 கோடி ரூபாயும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 1% குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.