இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என அரசு எச்சரிக்கை.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருவதையடுத்து, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரும் நிலையில், இந்த கட்டுப்பாடுகளையும் மீறி கொரோனா தொற்று அதிகரித்தால், அதாவது இந்த கட்டுப்பாடுகளை மக்கள் மீறி நடந்தால் மீண்டும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்த நேரிடும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டைப் பொருத்தவரை நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளும் மேற்கொண்டு வருகிறது. நோய்த்தொற்று விகிதம் மற்றும் இறப்பவர்களின் எண்ணிக்கை பிப்ரவரி 2021 வரை தொடர்ந்து குறைந்து வந்தது. ஆனால் தற்போது ஏப்ரல் 2021 சராசரியாக தினமும் 3900 அதிகமான நபர்களுக்கு புதிய நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடமாடும், காய்ச்சல் முகாம்கள் பரிசோதனை மையங்கள் ஆகியவை ஏற்படுத்தப்பட்டு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் மையங்களில் அனுமதிக்கவும் அல்லது வீட்டில் தனிமைபடுத்துவதற்கும் தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
கொரோனா நோய் தொற்று நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை மீண்டும் கடைபிடிக்க வலியுறுத்துவதோடு, இதனை மீறுபவர்களுக்கு தண்டனை அளிக்கப் படும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 16.03.2021 முதல் இதுவரை விதியை மீறியதாக ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 667 நபர்கள் கண்டறியப்பட்டு அவர்களிடமிருந்து, 2,88,90,600அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் நோய்தொற்று உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமாகக் கண்டுபிடிக்கப்பட்டு பரிசோதனை செய்தல், நோய்த்தொற்று பகுதிகளில் கண்டிப்பாக தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தீவிர பரிசோதனை, தனிமைப்படுத்துதல், நோயாளிகளுக்கு உயர் சிகிச்சை அளித்தல் போன்ற தொடக்க நிலையிலிருந்து கவனம் செலுத்துதல் மற்றும் தமிழ்நாடு மட்டுமே அனைத்து மாவட்டங்களிலும் பிசிஆர் பரிசோதனை செய்து வருகிறது.
இந்த பரிசோதனை இதுவரை 2.01 கோடி மாதிரிகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று கண்காணித்தல், நடமாடும் காய்ச்சல் முகாம் உட்பட தினமும் 3,000 காய்ச்சல் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாட்டில் நோய் தொற்று ஏற்பட்டவர்கள் 95.55 விழுக்காடு நபர்கள் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.41 விழுக்காடு என குறைவாக உள்ளது.
தமிழ்நாடு அரசு, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 30 நள்ளிரவு 12 மணி வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்துள்ளது. நாளை முதல் சில கட்டப்பாடுகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், இந்த முயற்சியில் பலன் கிடைக்கவில்லை என்றால், இரவு நேரத்தில் கொரோனா ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…