தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!
மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மத்திய, மானியில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர்.
தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு ஒரு நடவடிக்கைளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் வரும் நோயாளிகள் உள்ளிட்டோர் இன்று முதல் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அமைச்சர் அறிவித்திருந்தார்.
இதனிடையே, கொரோனா பரவல் காரணமாக மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். அதாவது, கொரோனா பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எண்பத்து வதந்தி என்றும் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களில் உண்மையில்லை எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.