ஊரடங்கை மீறியதாக 3,48,231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,15,73,819 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திலும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மே 17 வரை பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வராத வண்ணம் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவசியமின்றி வெளியை சுற்றித்திரியும் நபர்கள் மீது பல்வேறு நடவடிக்கையும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 4,16,344 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரடங்கை மீறியதாக 3,48,231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.4,15,73,819 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 3,93,463 வழக்குகள் பதிவாகியுள்ளன. இருப்பினும், வாகன உரிமையாளர்கள் தினசரி காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரை அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் ஆவணங்களை சரிபார்க்கப்பட்டு, பின்னர் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டு வருகிறது. வாகனம் பெற வரும்போது எப்ஐஆர் நகல் மற்றும் ஓட்டுனர் உரிமம் அசல் மற்றும் நகல், வாகனத்தின் ஆர்.சி.புத்தகம் அசல் மற்றும் நகல் கொண்டு வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா இன்று மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெற்றது. அதில்…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது என்பது ரசிகர்களுக்கு ஒரு சோகமான விஷயமாக அமைந்துள்ளது.…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி 1 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா…