தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆகவும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களுக்கு காவல்துறை நூதன முறையில் பல்வேறு தண்டனைகளை வழங்கி வருகின்றனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.43,13,544 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…