ஊரடங்கு மீறல்: 1,06,539 வாகனங்கள் பறிமுதல்..45 லட்சத்துக்கு மேல் அபராதம்.!

Default Image

தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834 ஆகவும், உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆகவும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 27 பேர் குணமடைந்துள்ளார்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்  பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மேலும் அவர்கள் சென்ற வாகனங்களை பறிமுதல் செய்யப்படுகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய தேவையின்றி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களுக்கு காவல்துறை நூதன முறையில் பல்வேறு தண்டனைகளை வழங்கி வருகின்றனர். ஊரடங்கை மீறி வெளியே சுற்றிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,06,539 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், ரூ.43,13,544 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

school - chennai imd
Amaran - Tamil Nadu BJP
queen elizabeth wedding
Kanguva
tn govt
09.11.2024 Power Cut Details
Ramya Pandian Wedding