CUET படிவம் – 10ம் வகுப்பு மதிப்பெண் பகுதி நீக்கம்!
CUET படிவத்தில் தமிழ்நாடு மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கம்
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிக்கல்:
CUET நுழைவு தேர்வுக்கு 10-ஆம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் என்பதால் தமிழ்நாட்டு மாணவர்கள் விண்ணப்பத்தில் சிக்கல் ஏற்பட்டது. 2021ம் ஆண்டு கொரோனா காரணமாக 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு, மதிப்பெண் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் CUET நுழைவு தேர்வுக்கு விண்ணப்பத்தில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டது.
CUET தேர்வு – 10ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம்:
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்பில் சேருவதற்கு CUET நுழைவு தேர்வு, தேசிய தேர்வு ஆணையம் மூலம் நடத்தப்படுகிறது. CUET நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டு 10 ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த ஆண்டு 12ம் வகுப்பு முடிப்பார்கள். எனவே, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இன்னும் வழங்காததால் CUET நுழைவு தேர்வுக்கு விண்ணப்பத்தில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு சிக்கல் நீடித்தது.
10ம் வகுப்பு மதிப்பெண் பகுதி நீக்கம்:
இந்த நிலையில், CUET நுழைவு தேர்வு விண்ணப்பத்தில் அதாவது படிவத்தில் தமிழ்நாடு மாணவர்கள் நலன் கருதி 10ம் வகுப்பு மதிப்பெண் குறிப்பிடும் பகுதி நீக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாணவர்கள் மற்ற பகுதிகளை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என்று திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தேர்வு கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இதே நடைமுறை இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.