கடலூர்:புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 – AVல் இன்று மறுவாக்குபதிவு நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 19-ஆம் தேதி,21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.அதில்,பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றியை பதிவு செய்தது.
இதற்கிடையில்,வாக்கு எண்ணிக்கையின் போது,இயந்திரம் பழுதானதால், கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 – AVல் பிப்.24ஆம் தேதி மறுவாக்குபதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,புவனகிரி பேரூராட்சி 4-ம் வார்டு வாக்குச்சாவடி எண் 4 – AV இல் இன்று மறுவாக்குபதிவு நடைபெறுகிறது.வாக்குப்பதிவானது இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.ஆனால்,மாலை 5 மணி முதல் 6 மணி வரை கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே,கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சியில் மட்டும் மறுவாக்குப்பதிவு காரணமாக தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் என்றும் மற்ற அனைத்து இடங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் வாபஸ் பெறப்பட்டன என்றும் நேற்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…
சென்னை : நீட் தேர்வு தொடர்பாக அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று மாலை தலைமைச் செயலகத்தில் நடக்கிறது.…