கடலூர் அரசு பள்ளியில் விபத்து…! தீயில் கருகிய புத்தகங்கள்…!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தீ விபத்து.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று வழக்கம்போல் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வந்த நிலையில், பணியை முடித்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், அனைத்து விதமான ஆவணங்கள், பாடப் புத்தகங்கள், சீருடைகள் உள்ள அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான கரணம் ஒன்றும் தெரியவில்லை. இதனையடுத்து கொடுக்கப்பட்டது. இதனையடுத்து, தீயணைப்பு துறையினர் வருவதற்குள்ளாகவே, அனைத்துமே எரிந்து சாம்பலாகியுள்ளது.
அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. இந்த விபத்தில், பள்ளி வளாகத்தில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. மேலும், இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.