NLC நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு தேவையில்லை – அன்புமணி ராமதாஸ்
NLC-யை சுற்றி நிலம் கையகப் படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற்றது. விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையிலான கூட்டத்தில், அமைச்சர்கள் சி.வி.கணேசன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் என்.எல்.சி. அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த நிலையில், இக்கூட்டத்திற்கு அழைப்பில்லாமல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் திடீரென தலைமை செயலகத்திற்கு வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அன்புமணி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அன்புமணி பேட்டி
அப்போது பேசிய அவர், கரிவெட்டி, கீழ் வளையமாதேவி, மேல் வளையமாதேவி ஆகிய 3 கிராமங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வருகின்றன. அதிகாரிகள் அளவில் விவாதித்து முடிவெடுப்போம் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி ஆய்வாளர்கள் தலைமையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை வைத்துள்ளோம்.
NLC நிறுவனம் கடலூர் மாவட்டத்திற்கு தேவையில்லை; கடைசியாக 1989ல் அங்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கொடுத்தார்கள். ஆனால், இப்போது வரை நிலம் கொடுத்தவர்களுக்கு நிரந்தர வேலை கொடுக்கவில்லை என டெஹ்ரிவித்துள்ளார்.