கடலூர்: மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கொரோனா உறுதி.!

கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலூர் மத்திய சிறையில் 8 கைதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மொத்த பாதிப்பு 26 ஆக அதரித்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் சக கைதிகள், காவலர்கள் இடையே அச்சம் உண்டாகியுள்ளது.
தமிழகத்தில், தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் நேற்று 4,979 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.4,059 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,481 ஆக உயர்ந்துள்ளது.