TAMILNADU : கொரோனா பாதிப்பில் கடலூர் இரண்டாவதாக உள்ளது ! மொத்தம் பாதிப்பு 229ஆக உயர்வு !
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் கடலூர் இரண்டாவதாக மாறியது. மொத்தம் பாதிப்பு 229ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸால் 4058 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 1485 பேர் கொரானாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், நேற்று (மே 5) ஒரு நாளில் தமிழகத்தில் 508 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் முதலில் உள்ள சென்னையில் நேற்று மட்டும் 279 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 2,008 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இதையடுத்து கடலூரில் மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கடலூரில் பாதிப்பு எண்ணிக்கை 229ஆக உயர்ந்து இரண்டாவதாக உள்ளது. இந்நிலையில், கடலூரில் இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.