#CSKvsRR: ஐபிஎல் போட்டி – மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 1 மணி வரை இயக்கம்.!
கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு 1 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு.!
கிரிக்கெட் ரசிகர்களின் வசதிக்காகநடப்பு ஐபிஎல் சீசனில் தொடர்ச்சியாக, பெரும்பாலான போட்டிகள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று சென்னை – ராஜஸ்தான் இடையிலான ஐபிஎல் போட்டி இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
சென்னை: இதனை முன்னிட்டு, ரசிகர்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் இன்று நள்ளிரவு வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது. அதாவது, அரசினர் தோட்ட ரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவு 1 மணிக்கு கடைசி ரயில் புறப்படும் எனவும், போட்டி முடிந்தும், 5-15 நிமிடங்கள் இடைவெளியிலும் ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
For the convenience of cricket fans, CMRL has made arrangements to run trains at 5 to 15 minutes frequency from government estate Metro Station after IPL match is over. The last train will leave government estate station at 01:00AM.
— Chennai Metro Rail (@cmrlofficial) April 12, 2023
முன்னதாக, சென்னையில் சி.எஸ்.கே. அணி விளையாடும் நாட்களில் மட்டும், போட்டிக்கான டிக்கெட்டை பயன்படுத்தி மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Press Release 01-04-2023 pic.twitter.com/9sr79WZGJj
— Chennai Metro Rail (@cmrlofficial) April 1, 2023