இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்தியா திரும்பியுள்ளார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றி விழா இன்று மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து விழாவுக்கான அழைப்பிதழை வழங்கினார். அதன்படி இன்று நடைபெற உள்ள இந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்.