நாகை – இலங்கை இடையேயான பயண கப்பல் சேவை நிறுத்தம்.! ஊர் திரும்பும் சுற்றுலா பயணிகள்.!
நாகப்பட்டினம் முதல் இலங்கையில் உள்ள காங்கேசன் வரையில் கடல்வழி மார்க்கமாக செல்லும் பயணிகள் சுற்றுலா கப்பல் சேவை கடந்த அக்டோபர் 14ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த சுற்றுலா போக்குவரத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவங்கி வைத்து வாழ்த்தினார்.
மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு ஆகியோர் எல்லாம் நேரில் வந்து இந்த பயணிகள் சுற்றுலா கப்பல் போக்குவரத்தை துவங்கி வைத்தனர். 150 பேர் பயணிகள் ஒரே நேரத்தில் பயணிக்கும் இந்த கப்பலில் முதல் நாளே 50 பேர் தான் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாவலூர் சுங்க சாவடியில் நாளை முதல் கட்டணமில்லை.! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!
காலை 7 மணிக்கு நாகையில் இருந்து புறப்பட்டு, 12 மணிக்கு இலங்கை செல்லும் எனவும், பகல் 1.30 மணிக்கு இலங்கை காங்கேசனில் இருந்து புறப்பட்டு 5.30 மணிக்கு நாகை வந்தடையும். இந்த சேவை தினந்தோறும் செயல்படுத்தப்படும் என கூறப்பட்ட நிலையில், அதற்கடுத்தடுத்த நாட்களில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக திங்கள், புதன் வெள்ளி கிழமை மட்டுமே பயண சேவை இருக்கும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது இதன் பயண கட்டணம் தான் எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. நாகை – இலங்கை பயண கட்டணம் முதல் நாளை தவிர மற்ற நாட்களில் 7,670 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தான் நாளை மறுநாள் முதல் இலங்கை – நாகை கப்பல் பயண சேவை நிறுத்தப்படுவதாகவும், மீண்டும் ஜனவரியில் இந்த சேவை தொடங்கும் எனவும் சுற்றுலாத்துறையினர் அறிவித்தனர். இதனால் இலங்கையில் சுற்றுலா சென்றுள்ள பயணிகள் நாடு திரும்ப உள்ளனர்.