உச்சம் தொடும் கச்சா எண்ணெய் விலை – இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!

Published by
Edison

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.

இந்நிலையில்,சென்னையில் கடந்த 2 மாதங்களும் மேலாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமுமின்றி தொடர்ந்து வரும் நிலையில்,125-வது நாளாக மாற்றமின்றி சென்னையில் இன்றும் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

100 நாட்களை கடந்தும் பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படாமல் உள்ளது என வாகன ஓட்டிகள் ஏற்கனவே கவலைக் கொண்டிருக்கும் நிலையில்,உக்ரைன் ரஷ்ய போர் காரணமாக இந்தியா வாங்கும் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 139 டாலராக அதிகரித்துள்ளது. 2012 ஆம் ஆண்டிற்குப் பின் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதனிடையே, இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நேற்று முன்தினம் முடிவடைந்து,அதன் முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது. தேர்தல் காரணமாக இதுவரை உயர்த்தப்படாத பெட்ரோல்,டீசல் விலை தேர்தல் ரிசல்டுக்கு பிறகு லிட்டருக்கு ரூ.23 வரை  உயரலாம் என கூறப்படுகிறது.

Recent Posts

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

CSK மேட்சுக்கு AK பேமிலி விசிட்! வைரலாகும் அஜித்குமார் வீடியோஸ்!

சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…

6 hours ago

CSK vs SRH : சென்னை படுதோல்வி..! CSK பிளே ஆப் கனவை தகர்த்த ஹைதராபாத்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…

6 hours ago

“காஷ்மீர் குற்றவாளிகள் கனவில் கூட நினைக்காத தண்டனை தர வேண்டும்” ரஜினிகாந்த் ஆவேசம்!

சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

7 hours ago

CSK vs SRH : பந்துவீச்சில் மிரட்டிய ஹைதராபாத்! தடுமாறிய சென்னை ‘ஆல் அவுட்’! 155 டார்கெட்!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…

8 hours ago

அரைக்கம்பத்தில் தேசியக்கொடி! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது! – தமிழக அரசு.

சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ்  கடந்த…

9 hours ago

CSK vs SRH : தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு!

சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…

10 hours ago