கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்…!கொதிக்கும் ராமதாஸ்
பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் கூறுகையில்,கச்சா எண்ணெய் விலை 22% குறைந்தும் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும் மத்திய அரசுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால் கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலைகளும் குறைக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் கொதித்துள்ளார் ராமதாஸ்.
அதேபோல் ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை திரட்ட முடியாததால் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார் இலங்கை அதிபர் சிறிசேனா. இது மிகமோசமான ஜனநாயகப் படுகொலை என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.