கரூரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் ஐடி அதிகாரிகள் சோதனை..!
கரூரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் ஐ.டி அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை
நேற்று முதல், சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது, திமுகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களது அடையாள அட்டையை காட்டுமாறு மிரட்டி, தாக்கியதாக கூறப்பட்ட நிலையில், 4 அதிகாரிகள் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இன்று, கரூரில் சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்புடன் ஐ.டி அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நிறைவடைந்த நிலையில், சோதனை முடிவில் ஒரு லேப்டாப் மற்றும் ஒரு ஐபேட் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வீட்டில் 30 ஆயிரம் ரூபாய் வைக்கப்பட்டிருந்த லாக்கருக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சீல் வைத்ததாகவும் கூறப்படுகிறது.