சிஆர்பிஎஃப் தேர்வு தமிழில்! மோடிக்கு ஆளுநர் ரவி நன்றி.!
சிஆர்பிஎஃப் தேர்வு தமிழிலும் அறிவிக்கப்பட்டதை அடுத்து, தமிழக ஆளுநர் ரவி, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவின் அறிவிப்பு:
தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளில் மத்திய அரசின் ஆயுதப்படை CRPF காவலர் தேர்வு நடத்தப்படும் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதுவரை இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்த தேர்வை, அந்தந்த மாநில மொழிகளில் நடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்துறை அமைச்சகத்திற்கு வலியுறுத்தியிருந்த நிலையில், அதனை ஏற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வரவேற்பு:
இந்த அறிவிப்புக்கு முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ரவி மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் தனது ட்வீட்டில் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் ட்வீட்:
ஆளுநர் தனது ட்வீட்டில் கூறியதாவது, ஒன்றிய ஆயுதப்படை காவலர் பணியில் சேரவிரும்பும், தமிழக இளைஞர்களுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும், இந்த அறிவிப்பை வெளியிட்டதற்கு தமிழக மக்கள் சார்பில் பிரதமர் மோடிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Great news for our thousands of young men and women from Tamil Nadu aspiring to join Central Armed Police Forces.
Now they can give entrance examination in Tamil. Thanks to Prime Minister Thiru. Modi on behalf of people of Tamil Nadu.@PMOIndia @HMOIndia @PIB_India @ANI https://t.co/IZovwOXBiJ— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) April 15, 2023