‘உண்மையை கடப்பதும் பொய்யின் மாறுவேடமே’ – மத்திய நிதியமைச்சருக்கு சு.வெங்கடேசன் எம்.பி பதில்..!

su.venkadesanmp

ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அபாண்ட பழி சுமத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா? என மத்திய நிதியமைச்சரிடம் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி 

முன்னதாக சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதி அமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர் என்றும், பொய் உங்கள் ஆயுதம். உண்மையே என்றும் எங்களின் கவசம் என்றும் தெரிவித்து அறிக்கை  வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், மதிப்பிற்குறிய நாடளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்களே, சூரயா  கைதானது ‘பொய்யா’? இல்லை கட்சி தொண்டர் சூர்யாவை தமிழக முதல்வரிடம் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைப்பது ‘பீதியை பரப்புவதா’? ஒரு சமூக பிரச்சனைக்கு நியாயமான தீர்வு காண நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும். மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண உழைப்பது நம் கடமை. இந்த உழைப்பிற்கு ஆயுதம் வேறில்லை. இதற்கு கவசம் தேவையில்லை. இதுவே உண்மை என தெரிவித்திருந்தார். 

இதற்கு பதிலளித்த சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள், மதுரையில் பெண்ணாடம் என்ற பேரூராட்சியே இல்லையே என்பதை தாண்டிச் செல்வது பொய்க்கு துணை போவதில்லையா, பீதிக்கு உதவி செய்வதில்லையா மாண்புமிகு நிதியமைச்சர் அவர்களே! ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது அபாண்ட பழி சுமத்துவதை நீங்கள் கண்டிக்க வேண்டாமா? உண்மையை கடப்பதும் பொய்யின் மாறுவேடமே என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்