பயிர்க்கடன் தள்ளுபடி – 15 நாட்களில் ரசீது ! முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
15 நாட்களுக்குள் பயிர் கடன் தள்ளுபடி செய்யப் பட்டதற்கான ரசீதுகள் விவசாயிகளிடம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை அறிவித்தார்.அதாவது, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவித்தார்.மேலும் கடன் தள்ளுபடி மூலம் சுமார் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். முதலமைச்சர் அறிவித்தவாறு வங்கிகளில் நிலுவையில் உள்ள 16,43,347 விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.12,110.74 கோடியை தள்ளுபடி செய்து அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது 15 நாட்களில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.