தமிழக சட்டப்பேரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது விவசாய நிலங்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காட்டுப் பன்றிகளால் சேதப்படுத்தப்படும் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதையடுத்து காட்டுப்பன்றிகள் விளைநிலத்திற்குள் நுழைவதை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து விவாதத்தில் சுற்றுச்சூழல் குறித்து திமுக எம்எல்ஏ தா.மோ. அன்பரசன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர், விவசாயத்தை பாதிக்கும் எந்தவித புதிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் தமிழகத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதிக்கும் அத்திட்டத்தை அமல்படுத்த தடை விதிக்கும் வகையில்தான் காவெரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் சட்டம் பேரவையில் நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்டார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…