“ முதலைக்கண்ணீர்” – என்ன செய்ய போகிறீர்கள்..? – சபாநாயகரிடம் சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி
நிர்மலா சீதாராமன் முதலைக்கண்ணீர் என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு என்ன செய்யப்போகிறீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லாவை டேக் செய்து சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே, நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டது. இந்த நிலையில், பயன்படுத்தக்கூடாது வார்த்தைகளில் முதலை கண்ணீர் இடம் பெற்றுள்ளது.
இதனையடுத்து, நேற்று பேசிய நிர்மலா சீதாராமன் முதலைக்கண்ணீர் என்ற வார்த்தையை தனது உரையின் போது பேசியிருந்தார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி, தனது ட்விட்டர் பக்கத்தில், “ முதலைக்கண்ணீர்” என்ற சொல் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் நேற்று பேசிய நிர்மலா சீதாராமன் இந்த சொல்லை அழுத்தந்திருத்தமாக பயன்படுத்தினார். என்ன செய்யப்போகிறீர்கள் என சபாநாயகர் ஓம் பிர்லாவை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.
“ முதலைக்கண்ணீர்” என்ற சொல் நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் நேற்று பேசிய @nsitharaman இந்த சொல்லை அழுத்தந்திருத்தமாக பயன்படுத்தினார்.
என்ன செய்யப்போகிறீர்கள் @ombirlakota pic.twitter.com/VTXPqpeiyF
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 2, 2022