விமர்சிப்பது – ஒன்று அறியாமை.. இன்றேல் ஆணவப் பொறாமை! – ஆசிரியர் கீ.வீரமணி

Default Image

தாய்க்கழகத்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள்! என உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்த ஆசிரியர் கீ.வீரமணி. 

புதிதாக அமைச்சராக பதவியேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்ற்னர்.

அந்த வகையில், திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘துடிப்பும், செயல்திறனும் மிக்க தி.மு.க.வின் இளைஞரணி செயலாளர் மானமிகு உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் இன்று ‘திராவிட மாடல்’ அமைச்சரவையில் ஓர் அங்கமாக ஆகி, அமைச்சர் பொறுப்பை ஏற்க மானமிகு, மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பரிந்துரைத்து, அப்பொறுப்பை ஏற்கிறார்!

தாய்க்கழகத்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள்! இவர் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொகுதி மக்களின் பேரன்பினை தமது கடமையாற்றும் தொண்டுமூலம் அவர்தம் உள்ளம் கவர்ந்துள்ளார்!’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்