முதல்வரை விமர்சித்து ட்வீட்! – பாஜக பிரமுகர் அதிரடி கைது
தமிழநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து ட்விட்டரில் அவதூறாக பதிவிட்டதாக கூறி கரூர் பாஜக பிரமுகர் விக்னேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணி புகாரின் பேரில் முனியப்பனூர் வீட்டில் விக்னேஷை போலீசார் கைது செய்தனர்.