சென்னையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கனிமொழி மரணதண்டனை மட்டுமே எல்லாம் குற்றங்களுக்கும் தீர்வாகாது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் சமூகத்திற்கும் பொறுப்புள்ளது எனவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் பெண்கள் குறித்து இடம்பெறும் காட்சிகளும் காரணமாக அமைகிறது. மேலும், பாலியல் கல்வி மிகவும் அவசியம் அதை அரசு கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார்.
இதையடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு திரைப்படங்கள் தான் இது போன்ற குற்றங்களுக்கு காரணம் என்றால் நாம் தான் அர்ஜுன்ரெட்டி, கபீர்சிங் போன்ற படங்களை பார்க்கிறோம். பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களுக்கு சினிமாவையும், டாஸ்மார்க்கையும் மட்டுமே குற்றம் சாட்டுகிறார்கள். சமுதாயத்தில் நடக்கும் எல்லாவிதமான குற்றங்களுக்கும் சினிமா தான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. உங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்பவர்களை துணிச்சலோடு எதிர் கொள்ளுங்கள் மற்றும் காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்று குஷ்பூ தெரிவித்தார்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…