பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் இடம்பெறும் காட்சிகளே காரணம்.! திமுக எம்பி பேச்சு.!

Default Image
  • சென்னையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது.
  • பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் பெண்கள் இடம்பெறும் காட்சிகளும் காரணமாக அமைகிறது என கனிமொழி கூறினார்.

சென்னையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா சார்பில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய கனிமொழி மரணதண்டனை மட்டுமே எல்லாம் குற்றங்களுக்கும் தீர்வாகாது பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில் சமூகத்திற்கும் பொறுப்புள்ளது எனவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பதற்கு திரைப்படங்களில் பெண்கள் குறித்து இடம்பெறும் காட்சிகளும் காரணமாக அமைகிறது. மேலும், பாலியல் கல்வி மிகவும் அவசியம் அதை அரசு கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறினார்.

இதையடுத்து பேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு திரைப்படங்கள் தான் இது போன்ற குற்றங்களுக்கு காரணம் என்றால் நாம் தான் அர்ஜுன்ரெட்டி, கபீர்சிங் போன்ற படங்களை பார்க்கிறோம். பெண்களுக்கு எதிராக  நடைபெறும் குற்றங்களுக்கு சினிமாவையும், டாஸ்மார்க்கையும் மட்டுமே குற்றம் சாட்டுகிறார்கள். சமுதாயத்தில் நடக்கும் எல்லாவிதமான குற்றங்களுக்கும் சினிமா தான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது. உங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்பவர்களை துணிச்சலோடு எதிர் கொள்ளுங்கள் மற்றும் காவல்துறையிடம் புகார் அளியுங்கள் என்று குஷ்பூ தெரிவித்தார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்