பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பிரத்யேக முகநூல் மற்றும் ட்விட்டர் கணக்கு.!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறித்த புகார்களையும், தகவல்களையும் கூற பிரத்யேக முகநூல் மற்றும் டுவிட்டர் கணக்கை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பல நடந்து வருகிறது. அதனை தடுக்கும் வகையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான குற்றத்தடுப்பு பிரிவு ஒன்று செயல்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள இந்த பிரிவுக்கான அலுவலகம் துணை ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுடன் இணைந்து சென்னையில் உள்ள 35 அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை குறித்த புகார்களையும், ஆலோசனைகளையும், அவர்களின் பாதுகாப்பிற்கு உரிய விழிப்புணர்வு உள்ளிட்ட தகவல்களை கூறுவதற்கு குற்றத்தடுப்பு பிரிவினரை எளிதில் தொடர்பு கொள்ள குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவுக்கென தனி முகநூல் கணக்கு(Greater Chennai Police – crime against women) மற்றும் ட்விட்டர் கணக்கை உருவாக்கியுள்ளனர். இதனை நேற்று சென்னையில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் துணை ஆணையர் ஜெயலட்சுமி உட்பட பல போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவன் என்ன அழைப்பது என்று இருக்காதீங்க”…மீண்டும் அழைப்பு விடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
March 3, 2025
ரூ.480 கோடியில் சிப்காட்., ஹஜ் இல்லம்., நாகைக்கு 6 திட்டங்களை அறிவித்தார் முதலமைச்சர்!
March 3, 2025