ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. டி-20 மற்றும் டெஸ்ட் தொடரை இந்திய அணி அதிரடியாக கைப்பற்றியது. இதில் தமிழக வீரரான யாக்கர் மன்னன் நடராஜன், முக்கிய பங்கு வகித்தார்.
ஒருநாள், டி-20, டெஸ்ட் என மூன்று தொடர்களிலும் கலந்துகொண்டு, முதல் போட்டியிலே தனது அற்புதமான பந்துவீச்சால் விக்கெட்களை வீழ்த்தியதால், இந்தியர்கள் மட்டுமின்றி, உலகளவில் இவரைப்பற்றி அதிகளவில் பேசப்பட்டது. இந்தநிலையில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய் நாடு திரும்பிய நடராஜனை சின்னப்பம்பட்டியை சேர்ந்த மக்கள், மேளதாளத்துடன் அவரை சாரட் வண்டியில் ஆரவாரமாக அழைத்து வரப்பட்டார்.
நடராஜனை வரவேற்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அங்கு திரண்டனர். சாரட் வண்டியில் பயணித்த நடராஜனுக்கு இந்திய கோடியை போர்த்தி அவ்வூர் மக்கள் வரவேற்றனர். அதுமட்டுமின்றி, நடராஜன் வெளிநாட்டில் இருந்து வருவதால் விதிப்படி 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவ அதிகாரி அன்புச்செல்வன் தெரிவித்துள்ளது, குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…