எரிவாயு தகன மேடையில் மட்டுமே சடலங்களை தகனம் செய்ய வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு
சடலங்களை தகனம் செய்ய ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் உடல்கள் எரிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய ஐகோர்ட் உத்தரவு.
எரிவாயு தகன மேடையில் மட்டுமே சடலங்களை தகனம் செய்ய வேண்டும் என்ற உத்தரவை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சடலங்களை தகனம் செய்ய ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் உடல்கள் எரிக்கப்படுகிறது என்பதை உறுதி செய்ய வேண்டும் என எஸ்.சபீர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சேலம் மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அஸ்தம்பட்டி கொல்லம் குட்டை ஏரி எதிரே திறந்தவெளி தகனமேடையில் சுகாதாரமற்ற முறையில் தகனம் செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது. சேலம் மாநகராட்சி உதவி ஆணையரின் உத்தரவை மீறி திறந்த வெளியில் சடலங்கள் எரிக்கப்படுவதாக மனுதாரர் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளார்.