ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில் வைரலாகும் “ஹிந்தி தெரியாது போடா” என்ற டி-ஷர்ட்டை, திருப்புர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வடிவமைத்துள்ளளார்.
சமீபத்தில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் புகைப்படம் ஒன்று, சமூக வலைதளத்தில் வைரலானது. அதில் அவர், I am a தமிழ் பேசும் indian என பதியப்பட்ட டி-சர்ட் அணிந்திருந்தார். அவரது உடன் இருந்தவர் hindi theriyaathu poda (ஹிந்தி தெரியாது போடா) என பதியப்பட்ட டி சர்ட் அணிந்திருந்தார்.
அவர்கள் அணிந்த அந்த டி-சர்ட் உலகளவில் ட்ரண்டானதை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் அந்த டி-சர்ட் மீது ஆர்வம் காட்ட தொடங்கினார்கள்.
இந்தநிலையில், இந்த டி-சர்ட்களை வடிவமைத்து உருவாக்கியவர், திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர். இவர் திருப்பூர் மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளராக உள்ளார். கார்த்திகேயன், கடந்த 5 ஆண்டுகளாக பின்னலாடை உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார்.
இவரிடம் இந்த டி-சர்ட் டிசைன்களை கொடுத்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆர்டர் வழங்கினார். முதல் கட்டமாக, 1,500 டி-சர்ட் தயாரித்து கொடுத்தார். நடிகர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் அணிந்ததை தொடர்ந்து, அந்த டி-சர்ட் அடுத்து ஒரே நாளில் உலகளவில் ட்ரண்ட் ஆனது.
இதன்காரணமாக, அவருக்கு தற்பொழுது 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டி-சர்ட்களுக்கான ஆர்டர்கள் வந்துள்ளதாகவும், குறிப்பாக அமெரிக்கா, கத்தார் போன்ற வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…