சரக்கு லாரி நேருக்கு நேர் மோதி கோரா விபத்து.! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த ஓட்டுநர்.!
- கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
- இந்த பயங்கர விபத்தில் 2 லாரி ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தங்கச்சியம்மாபட்டி, ஒட்டன்சத்திரம்-தாராபுரம் சாலையில், கன்னியாகுமரியில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு லாரியும், எதிரே, கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த பயங்கர விபத்தில் 2 லாரி ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் கன்னியாகுமரியில் இருந்து வந்த லாரியில் பயணித்த இளைஞர் ஒருவரும் படுகாயம் அடைந்தார். அவரை மீட்ட பொதுமக்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து விரைந்த அம்பிளிக்கை போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.