பட்டாசுகடை தீ விபத்து – பலி எண்ணிக்கை 9-ஆக உயர்வு…!
கிருஷ்ணகிரி தனியார் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்வு.
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய பேட்டையில் உள்ள தனியார் பட்டாசு குடோனில் இன்று காலை வெடிவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகள் வெடித்து சிதறியதில் குடோன் உட்பட மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்திய வரும் நிலையில், பட்டாசு கடைக்கு அருகில் இருந்த கடையில் சிலிண்டர் வெடித்ததால், இந்த விபத்து ஏற்ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்த நிலையில்,10 மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.