பட்டாசு ஆலை வெடி விபத்து – இரு பெண்கள் பலி!
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பெண்கள் உயிரிழப்பு.
தருமபுரி மாவட்டம் பொன்னகரம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்துள்ளனர். நாகதாசம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பழனியம்மாள், முனியம்மாள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு கிடங்கில் தீப்பிடித்து பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 2 பெண்கள் பலியாகியுள்ளனர்.சரவணன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தால் பழனியம்மாள், முனியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். வெடி விபத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.