செந்தில் பாலாஜி கைது விவரம் பற்றி அவர் வீட்டாருக்கே தெரியாது.! சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்.!

K Balakrishnan

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவரம் பற்றி அவர் வீட்டாருக்கே கூறவில்லை என சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். 

தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, அலுவலகம், தலைமை செயலக அறை என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இன்று அதிகாலை அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்து செல்ல முற்பட்டனர். தற்போது அவர் நெஞ்சுவலி காரணமாக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த கைது நடவடிக்கைக்கு திமுகவினர் மட்டுமின்றி பல்வேறு கட்சியினரும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கைது நடவடிக்கை குறித்து சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில்,  ஏற்கனவே 2016ல் தலைமை செயலகத்தில் நடந்த ரெய்டு குறித்து அப்போதே நாங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக கூறினார்.

அன்றைக்கு சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு நடத்தி பல கோடி ரூபாய் பறிமுதல் செய்தனர். அப்போது எப்.ஐ.ஆர்-படி தலைமை செயலகத்தில் ரெய்டு நடத்தினர். ஆனால், தற்போது, எந்தவித காரணமும் தெரிவிக்காமல் ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். எதனை செய்வதாக இருந்தாலும், இதுதான் காரணம், இதற்காக தான் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என அமலாக்கத்துறை பகிரங்கமாக சொல்லிட்டு செய்யுங்கள். என கூறினார்.

மேலும், செந்தில் பாலாஜி எதற்காக கைது செய்யப்பட்டார் என அவங்க வீட்டருக்கே அமலாக்கத்துறை தெரியப்படுத்தவில்லை எனவும், நேற்று இரவு 8 மணிக்கு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு, இன்று அதிகாலை 3 மணிக்கு செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என தனது கண்டனத்தை சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்