ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சர்ச்சை பேச்சு.! ஆளுநருக்கு எதிராக தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்.!
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆளுநர் ரவிக்கு எதிராக தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆளுநர் மாளிகையில், குரூப் 1 தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் மத்தியில் நேற்று பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி சட்ட மசோதாக்கள் நிறுத்தி வைப்பு, வெளிநாட்டு பணம், ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் போராட்டம் என பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.
ஆளுநர் ரவி பேச்சு :
அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் நடத்தியவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக குறிப்பிட்டு பேசினார். மேலும், சட்ட மசோதாவை ஆளுனர் நிறுத்தி வைத்துள்ளார் என்றால் அது, நிராகரிக்கப்பட்டதாக தான் அர்த்தம். ரத்து என்பதற்கு பதிலாக நிறுத்தி வைப்பு என கூறப்படுகிறது என பேசி இருந்தார்.
தூத்துகுடியில் போராட்டம் :
ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் பேச்சுக்கு எதிராக, இன்று தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினரும் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டமானது தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெற்றது.