மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் தலைமையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு 2019ஆம் ஆண்டு மத்திய அரசால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பிறகு அதில் சுற்று சுவர் கட்டும் பணிகளை தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை என திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடங்காதது கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எங்கே எங்கள் எய்ம்ஸ் எனும் போராட்டம் நடைபெறும் என மதுரை மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் நேற்று அறிவித்து இருந்தார்.
அதே போல சிபிஎம் தலைமையில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் மதுரை எம்பி சு.வெங்கடேசன், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் கையில் ஒற்றை செங்கலுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…
திருப்பதி : இந்திய கிரிக்கெட் அணி அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 3-1…
மதுரை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதிலும்…
சென்னை : இன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுதுவம் இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய தினங்கள்…