CPIProtest: நாளை முதல் தொடர் போராட்டம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி!

Published by
பாலா கலியமூர்த்தி

மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் மத்திய பாஜக அரசு, மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்துகிறது. எனவே, பிரதமர் மோடி தலைமையிலான அரசே வெளியேறு என வலியுறுத்தி செப்.12, 13, 14 ஆகிய தினங்களில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது என்றுள்ளார்.

அதாவது “மோடி அரசே வெளியேறு” என்ற முழக்கத்தை முன்வைத்து நாளை முதல் தொடர் போராட்டம் நடைபெறும் என்றும்  நாளை முதல் 3 நாட்களுக்கு நூற்றுக்கணக்கான மையங்களில் நடக்கும் மறியல் போராட்டத்தில் பல்லாயிரம் பேர் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, கடந்த சில தினங்களுக்கு முன்பு விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை கையிலெடுத்து ஆளும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தியது.

மணிப்பூர் பிரச்சனை, விலைவாசி உயர்வு,  வேலையில்லா திண்டாட்டம், அதானி விவகாரம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில்,  மத்திய பாஜக அரசை கண்டித்து நாளை முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

விலைவாசி உயா்வு உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் நாளை முதல் 14 வரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெறவுள்ள தொடா் மறியல் போராட்ட ஆயத்தக் கூட்டம் வாழக்கரையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியத் தலைவா் எஸ். பக்கிரிசாமி தலைமை வகித்தாா்.

அப்போது, நாளை முதல் நடைபெற உள்ள போராட்டத்தின் நோக்கங்கள் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் டி.செல்வம் பேசினாா். மேலும், இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. எனவே, நாளை முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“அடுத்த 36 மணி நேரத்தில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தும்” – பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு.!

இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…

8 minutes ago

“எங்களிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன” பாகிஸ்தானுக்கு பரூக் அப்துல்லா எச்சரிக்கை.!

காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…

38 minutes ago

இன்று சென்னை vs பஞ்சாப்.., சேப்பாக்கத்தில் விசில் பறக்குமா? பயிற்சியாளர் சொன்ன பாசிட்டிவ் தகவல்.!

சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…

1 hour ago

விசாகப்பட்டினத்தில் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு.!

விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…

2 hours ago

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

10 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

11 hours ago