நாங்கள் உங்களுக்காக வேலை செய்கிறோம் என ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள். – சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.
சமீபத்தில் ஒரு நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், கார்ல் மார்க்ஸ் பற்றி தனது சில கருத்துக்களை குறிப்பிட்டார். அவருடைய கருத்துக்கள் நாட்ட்டை சிதைத்துவிட்டதாக அவர் விமர்சித்து இருந்தார். இந்த கருத்துக்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. மேலும், ஆளுநரின் பேச்சு பலரது விமர்சனங்களுக்கு உள்ளானது.
கருப்பு கொடி போராட்டம் : ஆளுநர் கார்ல் மார்க்ஸ் பற்றி பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்பு கொடி போராட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்று வருகிறது. வரும் பிப்ரவரி 28ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பும், ஆளுநர் ஆர்.என்.ரவி எங்கெல்லாம் செல்கிறாரோ அங்கெல்லாம் கருப்பு கொடி காட்டபடும் எனவும் சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது.
சிறந்த தத்துவம் : இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தத்துவங்கள் சிறந்த தத்துவமாக மார்க்சிய தத்துவத்தை உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது. அடக்க நினைத்தவர்கள் எல்லம் அடங்கி போய்விட்டார்கள். என கூறினார்.
மன்னிப்பு கடிதம் : மேலும், விடுதலை போராட்டத்தை காட்டி கொடுத்தவர்கள் ஆர்எஸ்எஸ். நாங்கள் உங்களுக்காக வேலை செய்கிறோம் என ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதியவர்கள் ஆர்எஸ்எஸ்காரர்கள் என விமர்சித்த அவர், அடிமையாக இருந்த ஆர்எஸ்எஸ் அதன் வாரிசாக இருப்பவர் ஆளுநர் ஆர்.என்.ரவி. என விமர்சித்து, கற்பூர வாசனை யாருக்கோ தெரியாது என்பார்கள். அது போல தான் ஆளுநர் நடந்துள்ளார். என குறிப்பிட்ட்டார் அவர்,
எங்கு சென்றாலும் கருப்பு கொடி : மேலும், 28ஆம் தேதி தமிழகத்தில் எந்த மூளைக்கு சென்றாலும் சென்றாலும் ஆளுநருக்கு எதிராக கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கருப்பு கொடி காட்டுவார்கள். தமிழ் உரிமைக்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார். சட்டமன்றத்தையே சீரழித்துவிட்டார். என விமர்சித்தார் சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…