நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு! மா. கம்யூனிஸ்ட் செயலாளர் சண்முகம் கைது!
கடலூர் பகுதியில் முந்திரி காடுகளை அழித்து நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய போது மா. கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் : அரசு நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுப்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கடலூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில், மலையடி குப்பம், பெத்தான் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு நிலங்களில் விவசாயிகள் முந்திரி காடுகளை பராமரித்து விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலங்கள் அரசுக்கு சொந்தமானவை என்பதால் அங்குள்ள முந்திரி காடுகளை அழித்து நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுப்பட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள் முந்திரி கன்றுகள் நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளிக்காத காரணத்தால் அங்கிருந்து போராட்டக்காரர்களை களைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர் என கூறப்படுகிறது.
ஆனால் தொடர் போராட்டத்தில் விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்ட காரணத்தால் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் பெ.சண்முகம் கைது செய்யப்பட்டுள்ளார்.