8 வழிச்சாலை:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!
சேலம் – சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபயணம் மேற்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.
இது தொடர்பாக தூத்துக்குடி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் செயலாளர் தா.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் – சென்னை பசுமை வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து நடைபயணம் மேற்க்கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் K.பாலகிருஷ்ணன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தத்தில் வைத்து இன்று (03.08.18) மாலை 5.00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது என்று அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.