தமிழக ஆளுநர் போட்டி அரசாங்கம் நடத்துகிறார் .! சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சனம்.!
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி போட்டி அரசாங்கம் நடத்துகிறார் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் விமர்சித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. அதற்கான சட்ட மசோதாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் கையெழுத்திடாமல் இருக்கிறார். அவர் கையெழுத்திட்டால் தான் தமிழக அரசு அரசாணை வெளியிட்டு அந்த சட்டம் அமலுக்கு வரும்.
அதனால், இன்னும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு கையெழுத்திடாத ஆளுநருக்கு எதிரான குரல் தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. பலரும் ஆளுநர் கையெழுத்திட வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறுகையில், ‘ ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபாடு பணத்தை இழப்பவர்கள் பெரும்பாலும் படித்தவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் தான். மக்கள் நலன் சார்ந்த சட்டங்களை நிறைவேற்றாமல் போட்டி அரசாங்கத்தை தமிழக ஆளுநர் நடத்துகிறார். ‘ என தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். .