நீதிமன்றத்தில் தீக்குளித்து உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்.! சிபிஐ முத்தரசன் கோரிக்கை.!

Default Image

சாதிச்சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உயிரிழந்த வேல்முருகன் இறப்புக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். 

காஞ்சிபுரம் படப்பையைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி வேல்முருகன் என்பவர் தனது 10ம் வகுப்பு படிக்கும் மகனின் கல்விக்காக சாதிச் சான்றிதழ் கோரி 5 ஆண்டுகளாக ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து காத்து இருந்துள்ளார். இவர் மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவருக்கு சாதி சான்றிதழ் பலமுறை அலைந்தும் கிடைக்கவில்லை.

இதனால் மனம் வருந்தி, வேல்முருகன் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலேயே தீக்குளித்தார். பின்னர் தீக்காயங்களுடன் மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட வேல்முருகன் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சாதி சான்றிதழ் வழங்க தாமதமானதால் வேல்முருகன் உயிரிழந்த சம்பவதிற்கு பலரும் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், ‘  சாதி சான்றிதழ் வழங்கும் நடைமுறையை எளிமைப் படுத்த வேண்டும். அதற்கென காலவரம்பு நிர்ணயிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு அவரது குடும்பத்தாருக்கு வழங்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ‘ மலைக்குறவர் சாதி சான்றிதழ் வழங்குவதில் ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் செய்த அலட்சியத்தின் காரணமாவும், வரம்பற்ற தாமதத்தின் காரணமாகத்தான் வேல்முருகன் உயிரிழந்துள்ளார்.’ என இந்திய கம்யூனிஸ்ட் தமிழக மாநில செயலாளர் முத்தரசன் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்