சிபிஐ தமிழக போலீசார் மற்றும் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே, 22ல், தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் ஊர்வலமாக சென்று, போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் இறந்தனர். ஏராளமான பொதுமக்களும் காயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக, தூத்துக்குடி சிப்காட், தென்பாகம், வடபாகம் மற்றும் முத்தையாபுரம் காவல்நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தமிழக அரசு, துப்பாக்கிச் சூடு வழக்குகளை, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றியது. துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ., விசாரணைக்கு, உயர் நீதிமன்ற கிளை கடந்த ஆக.14ல் உத்தரவிட்டது. இதனையடுத்து சென்னை, சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள், துப்பாக்கிச் சூடு தொடர்பாக, 20 அமைப்புகள் மீது கொலை முயற்சி, கொலை மிரட்டல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய கோரப்பட்டது.இந்நிலையில் சிபிஐ தமிழக போலீசார் மற்றும் தமிழக வருவாய்த்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.பெயர் தெரியாத சிலர் வருவாய்த்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் ஆகியோர் மீது 7 பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…