தூத்துக்குடியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்துக்கு அபாயம்.!

Default Image

தூத்துக்குடி பகுதியில் ஆடு மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால் விபத்து ஏற்படுகிறது, இதனால் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி நிர்வாகத்தினருக்கு வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுக்க கோரி வற்புறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உள்ள காடு முத்தையாபுரம் முதல் வரையான சாலையோரம் உள்ள பகுதிகளில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடுகள் மற்றும் மாடுகள் மல் உணவுக்காக சாலைகளில் உரிமையாளர்கள் திரிய விடுகின்றனர் , மேலும் முத்தையாபுரம் ஸ்பிக் நகர் தெர்மல் நகர் , முள்ளக்காடு என்ற அனைத்து இடங்களிலும் ஆடு மாடுகள்அதிகமாக காணப்படுகிறது .

மேலும் குறிப்பாக கடைகளில் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த மாடுகள் அதிக அளவு நிற்பதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது, கடந்த காலங்களில் மாநகராட்சி மூலம் கால்நடைகளை அவிழ்த்து விடக் கூடாது என வலியுறுத்தப்பட்டது .

இதனால் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டு விபத்தும் குறைந்தது மேலும் தற்போது மீண்டும் அதிக அளவில் இந்த ஆடு மாடுகள் சுற்றி திரியும் நிலையில் சாலையின் நடுவில் இரவு நிலைதடுமாறி ஆடு, மாடுகள் மீது வாகனங்கள் மோதுகிறது, இதனால் மாடுகளுக்கும் வாகனங்களில் செல்பவர்களுக்கு காயமடைகின்றது.

மேலும் இது போல நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் சாலையில் திரியும் கால்நடைகள் மீது மோதி விடக்கூடாது என்று வாகனங்களில் வளைத்து செல்லும்போது எதிரே வரும் வாகனங்கள் மீது மோதும் சூழ்நிலை உருவாகிறது , இந்த நிலையில் மாநகராட்சி நிர்வாகத்தினர் இதற்காக உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு மாடுகளை பிடித்து காசோலையில் அடைப் பதுடன் அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்