பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்த மாடுபிடி வீரர் – நிவாரண நிதி வழங்கிய அமைச்சர் மூர்த்தி..!
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிதியுதவி வழங்கிய அமைச்சர் மூர்த்தி.
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர் அரவிந்த் ராஜன் அவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனை கொண்ட செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த நிலையில் உயிரிழந்த அரவிந்தராஜனின் குடும்பத்துக்கு தமிழக அரசின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்ன அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நிவாரண நிதிக்கான காசோலையை அரவிந்த்ராஜின் தாயாரை சந்தித்து அமைச்சர் மூர்த்தி அவர்கள் வழங்கினார்.
அதனை தொடர்ந்து சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் இணைந்து 2 லட்சம் ரூபாய் காண ரொக்க பணத்தையும் வழங்கினார். தங்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக தனது மூத்த மகன் நரேந்திரனுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அரவிந்தராஜின் தாயார் கோரிக்கை விடுத்தார்.