மாட்டுப் பொங்கல் 2025 : வித்தியாசமாக போடப்பட்ட கோலங்கள்!
இந்த ஆண்டு மாட்டுப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பார்ப்பதற்கு வித்தியாசத்தமாக பல இடங்களில் கோலங்கள் போடப்பட்டுள்ளது.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும் மாடுகளுக்கு அவர்களுடைய உரிமையாளர்கள் குளிப்பாட்டி சந்தனம், குங்குமம் வைத்து அலங்காரம் செய்து தங்களுடைய நன்றிகளை தெரிவிப்பார்கள்.
அதுமட்டுமின்றி தங்களுடைய வீட்டிற்கு முன்பு வித விதமாக மாடுகளை வரைந்து கோலமும் போட்டுக் கொள்வார்கள். அப்படி இந்த ஆண்டு வித்தியாசமாகவும் பார்ப்பதற்கு வேடிக்கையாகவும் பலரும் தங்களுடைய வீட்டிற்கு முன்பு கோலங்கள் போட்டுள்ளனர். அப்படி, சிலர் போட்ட வித்தியாசமான சில கோலங்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்..
ஒரு வீட்டில் இது எங்களுடைய பொங்கல் நாங்கள் தான் பொங்கல் வைப்போம் என மாடுகளே சொல்வது போல மாடு ஒன்று பொங்கல் வைக்கும்படி அழகான கோலத்தை வரைந்துள்ளனர்.
மற்றொரு வீட்டில் பசு மாடு ஒன்று கையில் கரும்பு ஒன்றை வைத்துக்கொண்டு அழகாக போஸ் கொடுத்தபடி அழகான கோலத்தை வரைந்துள்ளனர்.
மற்றொரு வீட்டில் நடிகர் அஜித் கார் ரேஸிற்கு சென்று வெற்றியடைந்ததை குறிக்கும் வகையில், தலையை மட்டும் மாடு தலையாக மாற்றி உடலில் அஜித்குமார் ரேஸிற்கு சென்ற உருவத்தை வைத்து கோலம் போட்டுள்ளனர்.