கொவிட்-19 விவகாரம்…பணம் மூலமும் நோய் தொற்று ஏற்படும்… டிஜிட்டல் முறையில் எரிபொருள் போட அறிவுரை…
கொவிட்-19 வைரஸ் பரவலை தடுக்க, டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்குமாறு, பெட்ரோல் நிலைய உரிமையாளர்களை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன என தகவல்கள் வெளிய்யாகியுள்ளன. தமிழகத்தில், இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்களின், 5,000க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் மற்றும் முகவர்களிடன் நடத்தி வருகின்றனர். அவற்றில், வாகன ஓட்டிகளிடம், ரொக்கமாக மட்டுமின்றி, ‘டெபிட் கார்டு, மொபைல் ஆப்’ போன்ற டிஜிட்டல் முறையிலும், பணம் வசூலிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும், ‘கொவிட்-19’ வைரஸ், ரொக்க பணம் வாயிலாகவும் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளிடம், மின்னனு முறையில், பணம் வசூலிப்பதில் முன்னுரிமை அளிக்குமாறு, பெட்ரோல் நிலைய உரிமையாளர்களை, எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளன. மேலும், பெட்ரோல் நிலையங்ககளில், கை கழுவும் சுத்திகரிப்பான் வைப்பது உள்ளிட்ட, துாய்மை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.