கொவைட்-19 விவகாரம்… பல்வேறு ரயில்கள் ரத்து… தென்னக ரயில்வே அறிவிப்பு..

Default Image

கொவைட்-19  வைரஸ் தொற்று  காரணமாக  இன்று (20.03.2020) மட்டும் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக  ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தென்னக  ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், 

  • விழுப்புரம்- செகந்திரபாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் வரும் 25ம் தேதியும், செகந்திரபாத்- விழுப்புரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் 26ம் தேதியும்,
  • சென்னை சென்ட்ரல்- விஜயவாடா ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும், விஜயவாடா- சென்னை சென்ட்ரல் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
  • அதேப்போன்று திருவனந்தபுரம்- கண்ணுர் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று 22, 23, 25, 26, 27, 29, 30 ஆகிய தேதிகளிலும், கண்ணுர்- திருவனந்தபுரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் 21, 23, 24, 26, 27, 28, 30, 31 ஆகிய தேதிகளிலும்,
  • லோக்மானியா திலக்- எர்ணாகுளம் துராந்தோ எக்ஸ்பிரஸ் 21, 24, 28, 31 ஆகிய தேதிகளிலும், எர்ணாகுளம்- லோக்மானியா திலக் துராந்தோ எக்ஸ்பிரஸ் 22, 25, 29 மற்றும் ஏப்ரல் 1ம்  தேதிகளிலும்,
  • சென்னை சென்ட்ரல்- கோவை சதாப்தி எக்ஸ்பிரஸ் இன்று, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும், கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் இன்று, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது.
  • அதேப்போன்று சென்னை சென்ட்ரல்- நிஜாமுதின் துராந்தோ எக்ஸ்பிரஸ் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளிலும், நிஜாமுதின்- சென்னை சென்ட்ரல் துராந்தோ எக்ஸ்பிரஸ் 28, 31 ஆகிய தேதிகளிலும்,
  • திருவனந்தபுரம்- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் 21, 28 ஆகிய தேதிகளிலும், சென்னை சென்ட்ரல்- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் 22, 29 ஆகிய தேதிகளிலும், மங்களூரு- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இன்று முதல் 31ம் தேதி வரையும்,
  • திருவனந்தபுரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ் 21ம் தேதி முதல் 31ம் தேதி வரையும், ஏப்ரல் 1ம் தேதியும், மங்களூர்-கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று முதல் 31ம் தேதி வரையும்,
  • கோவை- மங்களூர் இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் 21ம் முதல் 31ம் தேதி வரையும் மற்றும் ஏப்ரல் 1ம் தேதியும் ரத்து செய்யப்படுகிறது.
  •  சென்னை சென்ட்ரல்- பெங்களூரு சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று முதல் 31ம் தேதி வரையும், பெங்களூரு சிட்டி- சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் 31ம் தேதி வரையும் ரத்து செய்யப்படுகிறது.
  • அதைப்போன்று திருச்சி- திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று முதல்31ம் தேதி வரையும்,
  • திருவனந்தபுரம்- திருச்சி இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் இன்று முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது  என்று  தென்னக  ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்