தமிழகத்திலும் கொவிட்-19 வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு தற்போது எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தமிழக அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவில் பகுதிகளிலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோவில் செயல் அலுவலர்களுக்கு தற்போது உத்தரவிட்டுள்ளார்.
மேலும், ஸ்ரீரங்கம், மதுரை மீனாட்சியம்மன் போன்ற முக்கிய கோயில்கள் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது, கோயில்களுக்கு வரும் பக்தர்களின் நலன் கருதி 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கருவறை, சன்னதி மற்றும் கோயில் வளாகங்களில் கிருமி நாசினி மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து கோயில்களிலும் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை கோயில் ஊழியர்கள் சார்பில் மருந்து தெளிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…